Home » டீசல் பாலிடிக்ஸ்
உலகம்

டீசல் பாலிடிக்ஸ்

‘எனதருமை அமெரிக்க விவசாயிகள், கால்நடைப் பண்ணையாளர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு விலை குறைப்பு செய்வதே எனது தலையாயக் கடமை’ என அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

நீங்கள் ஊகித்தது சரிதான். அமெரிக்க இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. எளியவர்களின் குறை தீர்க்க ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடித்திருக்கிறார் அதிபர் டிரம்ப்.

இரானுடன் நடக்கும் போரால் உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்க மக்களுக்கும் இதன் பாதிப்புகள் பகிரப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் மூன்று டாலராக இருந்த டீசலின் விலை இப்போது ஆறு டாலராக இருமடங்கு உயர்ந்திருக்கிறது.

ஏன் பெட்ரோலுக்கு அதிபர் இந்தக் கரிசனத்தைக் காட்டவில்லை என்ற கேள்வி எழலாம். விவசாயம், கட்டுமானம், சரக்குப் போக்குவரத்து போன்ற நடுத்தர மக்களின் அன்றாடத் தொழிலுக்குப் பெரும்பாலும் தேவைப்படுவது டீசலே. அதனாலேயே அவர்களது அன்றாடச் செலவுகளைக் குறைப்பதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார். அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!