பித்தா…
மேடைக்கு வந்தார் ஜாப்ஸ். வழக்கத்தை விட மெதுவான நடை. மெலிந்த தேகம். ஜாப்ஸைப் பார்த்தவுடன் அரங்கமே எழுந்து நின்றது. தங்கள் அன்பைக் கரவொலியாக மாற்றினர். ‘இது எனக்கு இதமாக இருக்கிறது’ என்றார் ஜாப்ஸ்.
இன்னும் ஓர் அறிமுக விழா. இம்முறை ஐ-கிளவுட். ஆப்பிளர்களால் பெரிதும் புகழப்படும் ஒன்று. ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் இன்றியமையாத அங்கம்.
ஐ-கிளவுட் வந்த கதை சுவாரசியமானது. ‘டிஜிட்டல் ஹப்’ என்றொரு சொல்லை ஜாப்ஸ் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வந்தார். முன்னொரு அத்தியாயத்தில் இது குறித்துப் பார்த்திருக்கிறோம்.
பர்ஸனல் கம்ப்யூட்டர்கள்தான் டிஜிட்டல் ஹப்பின் மையமாக இருக்கும் என்று ஜாப்ஸ் கூறியிருந்தார். தொழில்நுட்பம் வளர வளர இதில் பெரும் மாற்றங்கள் வந்தன.
இனி இந்த டிஜிட்டல் ஹப்பின் மையம் கணினிகள் அல்ல. மாறாக கிளவுட் ஸ்டோரேஜ் என்னும் நிலை வந்தது.
இதை உடனே கணித்த ஆப்பிள் ‘MobileMe’ என்றொரு சேவையைத் தொடங்கியது. உங்களுடைய ஃபோன்களில் இருக்கும் காண்டாக்ட் தகவல்கள், குறுஞ்செய்திகள், ஃபோட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தும் மையமான ஓரிடத்தில் சேமித்து வைக்கப்படும்.















Add Comment