Home » Archives for அசோக் ராஜ் » Page 2

Author - அசோக் ராஜ்

Avatar photo

உலகம்

டிராகனின் இரும்புக் கரம்

ஹாங்காங்கின் பிரபல தொழிலதிபரும், ஆப்பிள் டெய்லி தினசரியின் நிறுவனருமான ஜிம்மி லாய் ஹாங்காங் அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜிம்மிக்கு இருபது வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது...

Read More
சுற்றுச்சூழல்

பாழாகும் யமுனை; பரிதவிக்கும் டெல்லி

டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து இருக்கின்றன. கோடைக்காலத்தாலோ வறட்சியாலோ இந்நிலை ஏற்படவில்லை. டெல்லிக்குக் குடிநீரை வழங்கும் யமுனையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் அது நன்னீராக இல்லை என்பதுதான் சிக்கலின் ஆதாரம். சில நாட்களுக்கு முன்புவரை...

Read More
உலகம்

இரான்: போரும் பொருளாதாரமும்

இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...

Read More
ஆளுமை

சுனிதா வில்லியம்ஸ்: இனி பூமியில் மட்டும் வசிப்பார்!

இருபத்தேழு வருடப் பெருமைக்குரிய பணிக்குப் பிறகு, நாசாவிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஐகானாக மாறியிருக்கும் சுனிதா, ஒரு பெண்ணாக இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது அசாதாரணமானது. அதுவும் விண்வெளித் துறையில் அதைச் சாதித்திருப்பது, இன்னும்...

Read More
சாகசம்

துருவம் தொட்டவள்

பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...

Read More
ஆண்டறிக்கை

மூன்று திட்டங்கள்

இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று...

Read More
விளையாட்டு

மெஸ்(ஸி)மரிசம்

மெஸ்ஸியின் வருகையில் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறான பிம்பம் இந்தியாவைப் பற்றி இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஹைதராபாத், மும்பை நிகழ்வுகளில் கொல்கத்தா அளவுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஆனால் கால்பந்துக்கு அவை நியாயம் சேர்த்ததா என்பது கேள்விக்குறியே. உண்மையில் இச்சிக்கல்களுக்கு யார்...

Read More
உலகம்

குற்றம் விளையும் நிலம்

சிறைச்சாலைகளின் அடிப்படை நோக்கம் குற்றம் செய்பவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது. இது குற்றவாளிக்கான தண்டனை என்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம். தனிமையில் சிந்திப்பதன் மூலம் தன் தவறுகளை உணரலாம், இனி திருந்தி வாழும் முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் இதற்கு...

Read More
உலகம்

தடை போட்டுத் தவிர்!

பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். டிசம்பர் பத்தாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப் சாட், எக்ஸ், திரெட்ஸ் போன்ற பெரும்பாலான ஊடகங்கள் இதில் அடங்கும். முதலில் யூடியூபுக்கு...

Read More
பெண்கள்

சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்

இந்திய மகளிர் அணிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. சமீப நாட்களில் பெண்களுக்கான இந்திய விளையாட்டு அணிகள் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருக்கின்றன. இந்த வெற்றிகள், விளையாட்டில் மட்டுமல்லாது பிற துறைகளில் செயலாற்றும் பெண்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!