பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை சற்றுத் தாமதமாக வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகளின் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு, அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படலாம் என்ற காரணமும் இருக்கலாம்.
இல்லத்தரசிகளுக்கு எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பன், இரண்டாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்புசெட்டுகள், அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்துதல், எட்டாம் வகுப்புவரை காலை உணவுத் திட்டத்தை நீட்டித்தல், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது திமுக.
தேர்தல் அறிக்கை என்பது வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான காரணியாக மாறி ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. வாக்குகளைச் சேகரிக்கும் கருவியாகத் தேர்தல் அறிக்கையை மாற்றிய வரலாறு திமுகவுக்கு உண்டு.















Add Comment