Home » நானே ஓர் இலவசம்
தமிழ்நாடு

நானே ஓர் இலவசம்

2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. ‘தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் எனக்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. டார்ச் லைட் சின்னத்துடனான எங்கள் தொண்டர்களில் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்’ என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் இந்தத் தியாகம், ஊடகங்களில் விவாதங்களையும் மக்களிடையே ஆச்சர்யத்தையும் எழுப்பியுள்ளது.

கமல்ஹாசன் தனது கொள்கைகளைத் திரைப்படங்களில் சமரசமில்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்தினார். ஆனால் அரசியலுக்கு வருவதற்கான எந்தக் குறிப்புகளையும் அவர் வெளிப்படுத்தியதில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு, கருணாநிதி சுயநினைவில்லாமல் படுக்கையில் இருந்தபோது திடீரென மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைக் கோபமாகச் சுட்டிக்காட்டி இணையதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டார். அவை பரவலாகச் சென்றடைந்து மக்களிடம் கவனம் பெற்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!