ஆறு மனமே ஆறு
ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது.
ஜாப்ஸின் இறப்புக்கு முன்னரே டிம் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். டிம்மைத் தேர்ந்தெடுத்தது ஜாப்ஸ்.
இதற்கான எதிர்ப்புகள் ஆப்பிளுக்கு உள்ளும் புறமும் இருக்கவே செய்தன. ஜாப்ஸின் ஆளுமைக்கு ஈடாக வேறொருவர் வர இயலாது. ஆனாலும் டிம் ஆப்பிளை நடத்தியாக வேண்டும். அதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் எண்ணற்றவை.
ஜாப்ஸ் வெறுமனே ஒரு சி.இ.ஓ மட்டும் அல்ல. அவர் ஒரு மக்கள் நாயகன். அவருடைய இறப்பு ஆப்பிள் ஆர்வலர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களுடைய பார்வையில் ஜாப்ஸ் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் அல்ல. தங்கள் வாழ்வின் ஓர் அங்கம்.
தங்களிடம் இருக்கும் ஐஃபோன், ஐபாட், ஐபேட், மேக் என ஆப்பிளின் அனைத்துக் கருவிகளிலும் அவர்கள் ஜாப்ஸைப் பார்த்தனர். தங்கள் வாழ்வை எளிதாக்கிய இக்கருவிகள் ஜாப்ஸ் கண்ட கனவு.















Add Comment