தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரியும் தேர்தலுக்குத் தயாராக இருக்கின்றன. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29ஆம். தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களிலும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் சுமார் 17.4 கோடி மக்கள் வாக்களிக்கும் தகுதியுடன் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 6.44 கோடி, தமிழகத்தில் 5.67 கோடி, கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி வாக்காளர்களும், புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் நேரம் கடும் கோடைக்காலத்தின் தொடக்கம் என்பதால் வயது முதிர்ந்தவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வருவதில் சிரமம் இருக்கும். அதேபோல் நோயாளிகள், அவசரப் பணிகளில் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத சூழல் நிலவும்.















Add Comment