Home » சோதனையா, வேதனையா?
நம் குரல்

சோதனையா, வேதனையா?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடித்திருக்கிறது. வாக்குக் கேட்டு எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாது தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகளைக் களமிறக்கிச் சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் சாமானிய மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து தமிழகத்தில் தேர்தல் கால நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அவற்றின்படி, தகுந்த ஆதாரம் இல்லாமல் யாரும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகவோ, தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்களாகவோ கொண்டு செல்ல அனுமதியில்லை. அப்படிப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!