அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்;...
Author - எஸ். சந்திரமௌலி
![]()
18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...
17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...
16. ஒரு சொல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட். பரோடா சமஸ்தானத்தின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர்; தன் குடிமக்களுக்குக் கல்வியும், சமூகச் சீர்திருத்தமும் அவசியம் என வலியுறுத்தியவர். இலவச...
15. டெல்லி தர்பார் லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு தொடருமானால், நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப, இதனை எப்படிக் கையாள்வது என்று மோதிலால் நேருவுக்குக்...
14. லீடர் “இந்தியா இன்னமும் பிரிட்டிஷ் முடியாட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே ஜனநாயகம் என்ற விதை முளைவிடவே இல்லை. ஆனாலும் அதை முளை விடுவதற்கு முன்பாகவே அழித்து ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியாவில்...
14. கறிக்கு உதவாத காய் இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு ஆட்சிப் பணி வாய்ப்பு. இங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு ஐ.சி.எஸ். தேர்வு எழுதுவார்கள்; அல்லது சட்டம் படித்துவிட்டு, சொந்தமாகத்...
12. சாகசம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன்...
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில்...














