ஒரு சுமாரான மீன்பிடி காலம். தேவையான அளவு மீன்களைப் பிடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தாய்லாந்து மீனவர் நரோங் பட்சேராஜ். வழியில் ஏதோ பாறை போல மிதக்க, வலையைப் போட்டார். முப்பது கிலோ எடையுள்ள, வழவழப்பான பிசினைப் போன்ற ஒரு பொருள் அகப்பட்டது.
கடலிலிருந்து வந்தவுடன் நேராக அதை பிரின்ஸ் ஆஃப் சாங்லா பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் சென்றார். ஆய்வகத்தில் சோதனை செய்தவர்கள், அது நல்ல ஒன்றாம் தர திமிங்கில வாந்தி என்று உறுதியாகச் சொன்னார்கள். அடித்தது யோகம் என்று மகிழ்ச்சி தாளவில்லை அவருக்கு. ஆய்வகத்திலிருந்து சான்றிதழை வாங்கியவர், உள்ளூர் ஊடகத்திலிருந்து உலக ஊடகம் வரை அனைவருக்கும் தகவல் அளித்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சீனப் பணக்காரர் ஒருவர், இந்திய மதிப்பில் பதினொரு கோடி கொடுத்து அந்த வஸ்துவை வாங்கிக் கொண்டார்.
வாந்திக்கு இவ்வளவு விலையா என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில் இது வாந்தி கூட இல்லை, திமிங்கிலத்தின் மலம். மலம் என்பதற்குப் பதில் வாந்தி என்று கூறினால் சங்கடங்கள் குறையும் எனத் தோன்றியதால் இப்படி அழைக்கிறார்கள்.
















Add Comment