Home » சாமிபூமி – 4
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 4

பேச்சியம்மன்

பெரியாச்சிக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் ஆறு கைகள் முளைத்தன. வலது கையால் ராணியை இழுத்துத் தன் மடியில் கிடத்தினாள். தனது கூரிய நகங்களால் அவளுடைய வயிற்றைக் கிழித்தாள். அரசி துடிதுடித்துச் செத்துப் போனாள். வயிற்றுக்குள் கையை நுழைத்து உறுப்புகளைப் பிய்த்து எடுத்தாள். ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த அவற்றைச் சாப்பிட்டாள்.

இவையெல்லாம் கணப்பொழுதில் நிகழ்ந்தன. வல்லராஜா அதிர்ந்து போனான். அங்கிருந்த அனைவரும் உறைந்து நின்றார்கள். பெண்கள் மயங்கி விழுந்தார்கள்.

பெரியாச்சி இத்தனை உக்கிரமானதற்கு வல்லராஜாதான் காரணம். பொல்லாதவன் என்பதற்கு நூறு சதவீதம் பொருத்தமானவன். அப்பாவி மக்களை அவன் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல.

பொதுமக்களை மட்டுமல்லாது சாமியார்கள், பிச்சைக்காரர்கள், அந்த வழியே செல்லும் பயணிகள் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. எப்போதும் அவனுடைய கண் முன்பு யாராவது துன்பமடைந்து கொண்டிருக்க வேண்டும். நேரடித் தொடர்பில் இல்லாதவர்களையே இப்படித் துன்புறுத்துகிறான் என்றால் அவன் அரண்மனையில் பணிபுரிபவர்கள் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? அரசு வேலை. மாதம் கண்டால் சம்பளம் என்பதால் பொறுத்துக் கொண்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!