ஆத்ம தரிசனம்
என்னை அடிக்கடிப் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தாள் அலக்ஸிஸ். பல புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் சுற்றி வந்தாள். நான் அவளுடன் நேரம் செலவழிக்காதது அவளுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்பதைப் போலக் காட்டிக்கொண்டாள்.
நீரில் மூழ்கி எழுந்தவுடன் எனக்குள் புரியாத மாற்றம் நிகழ்ந்திருந்தது. எனது மனது ஆழ்ந்த மௌனத்துடனும் ஒருவிதத் தவிப்புடனும் காணப்பட்டது. புற விஷயங்கள், முக்கியமாக எனது பழக்கங்கள் மேல் நாட்டம் குறைந்திருந்தது. டெண்டில் சென்று நண்பர்களுடன் இருக்கும்போதும் இரவு கொண்டாட்டங்களிலும் நான் முன்பு போல இருந்தேன்.
காலை விடிந்ததும் ஒருவிதத் தவிப்பு என்னைத் தொற்றிவிடும். மாலை சூரியன் மறையும் வரை இத்தவிப்பு இருக்கும். காலை உடனடியாகப் புறப்பட்டு வசிஷ்ட குகை செல்வேன்.
புதிதாகப் பார்ப்பவள் போல தினமும் பிரேமிக்கா என்னை வரவேற்பாள். அவளுடன் கோசாலையில் சில ஒத்தாசைகள் செய்வேன். குகையைச் சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவாள். சிறிது நேரம் கண்களை மூடி அமர்வோம். எனக்கு மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளும் உணர்வுகளும் வரும்.
















Add Comment