ஹக்கிங் ஃபேஸை வாங்கும் என்வீடியா
என்வீடியா (Nvidia) ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்குவது அமெரிக்காவில் சாதாரண விஷயம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால் இது கவனம் பெறுகிறது.
சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில், இன்று உலகின் மிகப் பெரிய நிறுவனமாக என்வீடியா திகழ்கிறது. 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் என்வீடியாவின் மதிப்பு சுமார் 510 லட்சம் கோடி இந்திய ரூபாய். இது இந்தியாவின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைவிட ஒன்றரை மடங்கு அதிகம். கூகுள், ஆப்பிள் போன்ற பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் போல இல்லாமல், என்வீடியா விற்பது ஜிபியு என்னும் ஒரே ஒருவகைப் பொருளைத்தான்.
ஜிபியுக்கள் கணினியின் சிறப்பு மூளை போல. முதலில் கணினி விளையாட்டுகளுக்கு (வீடியோ கேம்ஸ்) பயன்படுத்தப்பட்டு வந்த ஜிபியுக்கள் இப்போது செயற்கை நுண்ணறிவுக்கு இன்றியமையாதவை ஆகிவிட்டன. அதனால் இவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. குறிப்பாக, அமெரிக்கா–சீனா இடையிலான ராணுவப் பலம் சார்ந்த பொருளாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.















Add Comment