பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை, இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வயதில், ரவுல் ஜான் அஜூ தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கற்பிக்கிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயதான ரவுல் ஜான், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரது பணிகள் இவரைப் பள்ளிக்கு அப்பால் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளன. சர்வதேச அளவில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கியுள்ளார். பதினைந்து பேர் கொண்ட ஒரு குழு இவரிடம் பணிபுரிகிறது.
இவை அனைத்துக்கும் மேலான ஓர் ஆச்சர்யமான விஷயம் இவரது தந்தை அஜூ ஜோசப்பைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளார். அவருக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குகிறார்.















Add Comment