பாகிஸ்தானின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஆயுதப்படை வீரர்களைப் பணியமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் ஓய்வு பெறச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார் அந்நாட்டின் முப்படைத் தளபதியான அசிம் முனிர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்தடுத்து குவிக்கப்பட்ட அதிகாரங்களால், தற்போது பாகிஸ்தானின் உச்ச சக்தியாக மாறியிருக்கிறார் அசிம் முனிர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், உச்ச நீதிமன்றம், முப்படைகள் போன்ற அமைப்புகளால் கட்டுப்படுத்த இயலாத பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் வாழ்நாள் ஃபீல்ட் மார்ஷல் என்ற நிலைக்கு உயர்ந்திருந்தார் அசிம் முனிர். இதன் மூலம், அயூப் கானுக்குப் பிறகு இந்தப் பதவியை அடைந்த இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தப் பதவி அவருக்குப் பல சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.
















Add Comment