சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...
Author - வினுலா
![]()
ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...
ரசம் வைக்க முடிவு செய்கிறீர்கள். அட, தாளிக்கக் கருவேப்பிலை இல்லையா? கவலை வேண்டாம். ஸெப்டோவில் ஆர்டர் செய்து விட்டு, புளியை ஊற வைப்பதில் தொடங்கி ரசத்திற்குத் தேவையானவற்றைக் கூட்டிச் சேருங்கள். நீங்கள் தாளிப்புக்குத் தயாரானவுடன் கருவேப்பிலையும் வந்து சேர்ந்துவிடும். எட்டு அல்லது பத்து நிமிடங்களில்...
ஐ.நா. நிர்வாகப் பணிக்குழுவை இஸ்ரேல் தடை செய்துள்ளது. “வடக்கு காஸா தற்போது பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களனைவரும் இறக்கும் நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது.” என்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸ். இப்படி எத்தனையோ...
சென்ற வாரம் முழுக்க நம் பத்திரிகைகளை நிறைத்தது இந்த மும்மூர்த்திகளின் படம் தான். ரஷ்ய அதிபர் புதின் நடுவிலிருக்க, இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருபுறமும் வீற்றிருந்தார்கள். நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும் நண்பர்கள் மூவரும் பிரியவே இல்லை. உலக உருண்டையில் மேற்குலகம்...
நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை வடிவமைத்து...
படிப்பிலும், பணியிலும் முதலிடம் பிடித்த அன்னா செபாஸ்டியன், இறப்பிலும் முந்திக் கொண்டுள்ளார். இருபத்தாறு வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் அளவுக்கு அவரது பணிச் சூழல் இருந்துள்ளது. வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன அன்னாவிடம் விடிய, விடிய வேலை வாங்கிய அலுவலக ஊழியர்கள் யாரும், அவரது இறுதிச்...
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...













