229. டெல்லி பயணம்
என்.டி.ஆரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றிச் சென்றதையடுத்து, புதிய முதலமைச்சர் நாதெண்ட்ல பாஸ்கர ராவ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
‘மத்திய அரசுடனான மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டது; ஆந்திராவின் நலன் கருதி, மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவோம்’ என்றார்.
‘நிஜமான தெலுங்கு தேசம் கட்சி என்னுடையதுதான்! தெலுங்கு தேசம் கட்சியின் தொடக்க காலக் கொள்கைகளைச் செயல்படுத்துவோம்!’ என்றவர், ‘தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்களை ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் என்.டி.ஆர் சிறைபிடித்து வைத்திருக்கிறார், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார்.
ஜனநாயகம் என்பதையே காலில் போட்டு மிதித்து காங்கிரஸ் கட்சியும், அதன் கைப்பாவையாக கவர்னரும் செய்த ஜனநாயகப் படுகொலையும், பாஸ்கர ராவின் பதவி ஆசையும், துரோகமும் என்.டி.ஆரையும் அவரது கட்சியினரையும் எதிர்க்கட்சிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.















Add Comment