படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் இயக்குநரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்கள் தொடர் படப்பிடிப்பு. அதனால் உடல்நலம் சரியில்லாமல் போனது.
அசரவில்லை அவர். வீட்டில் அதன் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது வழியாக அவர் படப்பிடிப்பைப் பார்வையிட்டார். தன் வீட்டிலிருந்தே இயக்கினார். அப்போதும் சிறிய தவறுகளைக் கூட சரிசெய்தார். அதுதான் அவருடைய அர்ப்பணிப்பு.
அந்த இயக்குநரின் பெயர் சிங்கீதம் சீனிவாசராவ். வயது 95. படம் ‘சிங் கீதம்’. அவருடைய கடைசிப் படம்.
முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கீதம் சீனிவாசராவ், சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 3ஆம் தேதி சனிக்கிழமையன்று காலமானார்.















Add Comment