Home » புதிரோடு விளையாடு
அறிவியல்-தொழில்நுட்பம்

புதிரோடு விளையாடு

சூ கிம்

இன்று உலகம் முழுவதும் பலரும் ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை செல்பேசிகளில் காணொளிகளைக் கண்டு செலவழிக்கிறார்கள். இதோடு செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இவற்றின் தாக்கம் மாணவர்களின் கல்வி முறையையும் விட்டுவைக்கவில்லை.

பிள்ளைகள் பலரும் தங்களின் பாடங்களைக் கற்க இவற்றையே பயன்படுத்துகிறார்கள். தங்களின் கேள்விக்கு வரும் விடைகளைப் பார்த்து கற்கும்போது அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பாடத்தில் வரும் வினாக்களை உள்வாங்கி, அவற்றைச் சிந்தித்துச் செயல்படுத்திப் பார்ப்பதில்லை. இந்தப் போக்கை மாற்ற, பன்னிரண்டாண்டுகளுக்கு முன்னர் வந்தது பிரில்லியண்ட் (Brilliant) செயலி.

இது தொடங்கப்பட்ட கதை, மற்ற செயலிகளின் கதையைவிடச் சற்றே வித்தியாசமானது. தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போது ‘சூ கிம்’ (Sue Khim) மூன்று மாதப் பெண் குழந்தை. அவரின் பெற்றோருக்குப் பெரிய வசதி இல்லாததால் சிகாகோ நகரின் அரசுப் பள்ளிக் கூடத்தில் படித்தார் சூ. கணிதத்தில் அதீத ஆர்வம் கொண்ட அவருக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள் எளிதாகவே இருந்தன. அவரோடு போட்டிப் போடவும் யாருமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!