திருச்சியில் குடிநீர் வறட்சி. மக்கள் தெருவில் இறங்கி தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி பாயும் பூமி. தென்மேற்குப் பருவமழை உச்சத்தில் இருக்கும் காலம். என்ன ஆனது காவிரி நீருக்கு?
காவிரி குடகில் தோன்றி பூம்புகாரில் கடல் சேரும் முன் 768 கிமீ பயணிக்கிறது. தமிழகத்தின் ஆறுகளில் நீளமானது. இந்தியாவின் ஏழாவது பெரிய நதி.
தி.ஜாவும் சிட்டியும் இதன் வழியில் பயணம் செய்து புத்தகம். எழுதினார்கள். காவிரியின் போக்கை ‘சங்கீத ஆலாபனை’ என்கிறார். இசைபோல் ஏற்ற இறக்கங்கள், நெளிவுசுளிவுகள் கொண்டது. ஆனால், குரலற்று காவிரி வறண்டு போவதையும் பல இடங்களில் சொல்கிறார்.
கம்பர் தன் மகளுக்கு ‘காவிரி’ என்று பெயரிட்டார். அவர் பாடிய சரயு நதிப் படலம் காவிரிப் படலம் என்பார்கள்.
மணிகளையும், மாலைகளையும் இடறிக்கொண்டு, இருபுறமும் ஓங்கிய மலைகள், சோலைகள் நடுவே வளமென வருகிறது.
அதற்கு முன் இப்படி ஒரு புறநானூற்றுப் பாடல்.















Add Comment