Home » குறும்புக் கிளிகள்
இயற்கை

குறும்புக் கிளிகள்

வா, உள்ள வா. ஏன் லேட்? என்று குட்டி குட்டி வார்த்தைகளால் வரவேற்பது போலிருந்தது அந்தக் கிளிகளின் சத்தம். தென் அமெரிக்காவின் சன் கான்யூர் வகைக் கிளிகள் அவை. இப்படித்தான் எப்போதுமே உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருக்குமாம்.

சிறிய கறுத்த அலகு. செம்மஞ்சள் நிறம் தலையில் ஆரம்பித்து நெஞ்சுக்குப் பரவி கால்கள் வரை நீடிக்கிறது. பின்கழுத்து ஆரம்பத்திலிருந்து ஒளி வீசும் மஞ்சள் நிறம் அந்த அறை முழுவதையும் ​பொலிவாக்கியது. மயிலுக்கு நான் ஒன்றும் குறைச்சலில்லை என்று அடுக்கடுக்காக வெவ்வேறு நீளத்திலிருந்த அதன் இறகுகள் முடிவிலும் வாலிலும் மயில் தோகையின் வண்ணங்கள். இளம்பச்சையில் தொடங்கி பச்சை, கரும்பச்சை, வெளிர் நீலம், நீலம், அடர் நீலம் என மஞ்சளின் மங்களத்துடன் கண்ணைப் பறித்தன அதன் இறகுகள். வட்டமான வெண்விழியில் நம்மை பார்க்கும் துறுதுறு கருவிழிகள். நாம் கைகளை விரித்தவுடன் குழந்தையைப் போலத் தாவி வந்து ஏறிக்கொண்டன.

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் ஜங்ஷனில் அமைந்திருக்கும் கூக்கீலேண்ட் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா இது. பெரியவர்களுக்கு இருநூறு ரூபாயும் குழந்தைகளுக்கு நூறு ரூபாயும் நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி இந்தக் குறும்புக் கிளிகளை நீங்களும் கையிலேந்த முடியும். ஒவ்வோர் அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை. நம்மைத்தான் அது சுற்றித்திரியும் கூண்டுக்குள் அனுப்பி அதன் உலகைக் கண்டு ரசிக்க அனுமதிக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!