Home » மலைராணி டாலி
முகங்கள்

மலைராணி டாலி

டாலி பார்ட்டன் 

அமெரிக்க நாட்டுப்புற இசையுலகின் ஒப்பற்ற அடையாளம் டாலி பார்ட்டன். இவர்  வெறும் ஒரு பாப் நட்சத்திரமோ பாடகியோ மட்டுமல்ல; அப்பலாச்சியா மலைப் பகுதியின் எளிய கிராமப்புறப் பண்பாட்டை உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்தவர். தனது கூர்மையான தொழில் திறமையாலும், வள்ளல்தன்மையாலும் கலாசார எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஓர் அபூர்வ ஆளுமை.

டாலி பார்ட்டனின் வாழ்க்கைப் பயணம் வறுமை, இசை, பெண்ணியம், எல்லைகளற்ற மனிதநேயம் ஆகிய இழைகளால் இணைந்து நெய்யப்பட்ட ஓர்  உன்னதமான சித்திரம். டாலி பார்ட்டனின் இசை மற்றும் எழுத்தின் ஆணிவேர் அவருடைய சிறுவயது வறுமையில்தான் இருக்கிறது.

கிழக்கு டென்னசியின் கிரேட் ஸ்மோக்கி மலைப்பகுதியில் வறுமை நிறைந்த குடும்பத்தில் பன்னிரண்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார் டாலி. டாலியைப் பிரசவித்த மருத்துவருக்குக் கொடுக்கப் பணமில்லாததால், அவருடைய தந்தை ஒரு பை சோள மாவைக் கட்டணமாகக் கொடுத்தார். துணி வாங்கக் காசில்லாமல், எஞ்சிய பல வண்ணத்துணிகளை வைத்து அவருடைய அம்மா தைத்துக் கொடுத்த சட்டையைப் பற்றிய பாடலான ‘Coat of Many Colors’, வறுமையிலும் சுயமரியாதையோடு வாழ்வதைப் பற்றிப் பேசியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!