மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் டெம்பிள் பார்க் என்ற ஹோட்டல் உண்டு. அதன் வாசலில் ஒரு ஓரத்தில் உள்ள பேனாக்கள் ரிப்பேர் செய்யும் சிறிய கடை. கடை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு அடி நீள மேஜை. உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலி. அதில் ஒரு அட்டையை வைத்துக் கட்டி வைத்திருக்கிறார். கோவில் பக்கம் சென்று பேனாக்காரர் கடை என்றால் இந்த மேஜையைத்தான் கை காட்டுகிறார்கள்.
உடைந்து போன பேனாக்களைச் சரி செய்வது. வெளியே அதிகம் கிடைக்காத மரக்கட்டை பேனாக்களை விற்பனை செய்வது. இதுதான் இவருடைய தொழில். அதைத்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் செய்து வருகிறார் சீனிவாசன். அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘பேனாக் கடை சீனி தாத்தா’.
‘எனக்கு இப்பொழுது எழுபத்து ஒன்பது வயது. பதினெட்டு வயதில் இருந்து இந்த பேனா ரிப்பேர் தொழிலில் இருக்கிறேன். அதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து என் அப்பா இந்தத் தொழிலில் இருந்தார். எண்பது வருடங்களுக்கு மேலாக எங்கள் குடும்பத்துக்கு இதுதான் தொழில்.’
















Add Comment