இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனது. 1980களின் பாணி படங்கள் டைம்லைனில் உலவிக் கொண்டிருந்தன. ஆண்கள் பெல் பாட்டம் பேண்ட்டுகளிலும் பெண்கள் காலிஃப்ளவர் அளவிலான ரோசாப்பூவைக் கொண்டையில் சொருகியவாறும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதுபோன்று பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இதர அன்றாட வேலைகளுக்கும் செய்யறிவுச் செயலிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். செய்யறிவு உலகம் மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு முடிந்து விடுவதில்லை. நாம் காண்பது ஒற்றைப் பனிப்பாறையின் கூர்முனையைத் தான். நாமறியாத ராட்சத உலகம் ஒன்று அதற்கடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரே சமயத்தில் பல்வேறு செயல்களைச் செய்வதே செய்யறிவு மாதிரிகளின் பிரதான நோக்கம். அவற்றைச் செயல்படுத்தவே சிப்புகள் (GPU chips) பயன்படுத்தப்படுகின்றன. செய்யறிவு அமைப்பின் அடிநாதமே சிப்புகள்தான்.















Add Comment