Home » போதையில் தள்ளாடும் பீகார்
குற்றம்

போதையில் தள்ளாடும் பீகார்

பீகாரின் ஒரு சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞன், கீழே கிடந்த தனது செருப்பை எடுக்க முனைந்தான். பிரச்சனை அதுவல்ல. ஏதோ சூப்பர் ஹீரோ படங்களின் ஸ்லோமோஷன் காட்சியைப் போல, தள்ளாடியபடி தடுமாறிக் கொண்டிருந்தான் அவன். கிட்டத்தட்ட ஒரு ஸோம்பியைப் போலவே காட்சியளித்தான். சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியான இந்தக் காணொளி, பலரையும் அச்சப்படச் செய்தது.

தள்ளாடியது அவன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பீகாரும்தான்.

சமீப வருடங்களில் அதீத போதைப் பழக்கத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர் பீகாரிகள். மதுபானம் அல்ல, கஞ்சா கூட அல்ல, அதைவிடக் கொடூரமான ஹெராயின், கோட்டா எனும் இரண்டு பொருட்கள் அம்மாநிலத்தையே திக்குமுக்காடச் செய்து கொண்டிருக்கின்றன.

அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது பீகார் காவல்துறை. முடிந்த அளவுக்குக் குற்றவாளிகளையும் போதைப் பொருட்களையும் பிடித்தாலும், அதைவிடப் பலநூறு மடங்கு வெளியே பரவுவதைத் தடுக்க முடியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!