Home » தியானம் செய் மனமே
அறிவியல்-தொழில்நுட்பம்

தியானம் செய் மனமே

உடற்பயிற்சி நல்லது. அதோடு தினமும் சில நிமிடங்கள் தியானம் (மெடிடேஷன்) செய்வது நமது ஆரோக்கியத்தைக் காக்கும். ஆனால் தியானம் அவ்வளவு எளிதானதா, எல்லோரும் செய்ய முடியுமா, நமது அன்றாட வாழ்வில் எங்கே போய் தியான முறைகளைக் கற்பது, அதை எப்படிப் பழகுவது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது ஹெட்ஸ்பேஸ் செயலி. இந்தச் செயலிக்குப் பல கோடி பயனர்கள் இருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்றோர்.

ஹெட்ஸ்பேஸ் செயலியில் பத்து நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் செய்யக் கூடிய தியானப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என நாமாகவே எங்கே வேண்டுமானாலும் செய்யக்கூடிய வகுப்புகள் கிடைக்கின்றன. அதோடு, மனதை அமைதிப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகள், இரவு நல்ல உறக்கம் வர உதவும் பயிற்சிகளும், இசையும் இருக்கின்றன. நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இச்செயலி மூலமாகவே மனநல வழிகாட்டிகளோடு கலந்துரையாடலாம், ஆலோசனையும் பெறலாம். முழுச் செயலியும் பதினான்கு நாட்கள் சோதனை முறையில் இலவசமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு பயன்படுத்தச் சந்தா எடுக்க வேண்டும், இந்தியர்களுக்கு ஓராண்டுக்கான சந்தா 1,500 ரூபாய்.

ஹெட்ஸ்பேஸ் செயலி தொடங்கப்பட்ட கதையைப் பார்க்கலாம். 1972ஆம் ஆண்டு லண்டன் நகரில் பிறந்தவர் ஆன்டி புட்டிகோம் (Andy Puddicombe). ஆன்டி வளர்ந்தது தென்மேற்கு பிரிட்டனில் பிரிஸ்டல் நகருக்கு அருகே ஒரு சிறு விவசாயக் கிராமத்தில். அவரது இளம்வயதில் அவருடைய தந்தை பல ஆண்டுகள் மனஅழுத்தத்தில் அவதிப்பட்டார். அதனால் நிரந்தர வேலை எதிலும் அவரின் தந்தை இருந்ததில்லை. அதே சமயம் ஆன்டியின் தாய் குடும்பத்தை நடத்தப் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டார். பின்னர் அவருடைய தாய் தானாகவே தொழில் தொடங்கி ஹிப்னோதெரபிஸ்ட்டாகவும், உளவியல் மருத்துவராகவும் பணிபுரிந்தார். தனது பெற்றோரின் இந்த இருவேறு வாழ்க்கைமுறைகள் ஆன்டியின் மனதிலேயே தங்கிவிட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!