தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா...
வணக்கம்
நேற்று இருந்து, இன்று இல்லாமல் போய்விட்டவற்றை நினைவுகூரும் விதமான இந்த இதழின் சிறப்புப் பகுதியில் முதலில் மூன்று கட்டுரைகள் வெளியிட நினைத்திருந்தோம். பிறகு அது நான்கானது. அதுவே ஐந்தாகி ஆறுமானது. விஷயம் அதுவல்ல. அறுபது கட்டுரைகள் வெளியிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட இயல் மட்டும் முழுமையடைய வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டுகொண்ட தருணம் இருக்கிறது பாருங்கள்! அது, அபாரம்.
சிறு வயது முதல் நாம் மறந்து தொலைத்தது, இழந்து வருந்தியது, விரும்பி விலக்கியது என்று நம் வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டதையெல்லாம் மீட்டுவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று எண்ணாதவர் இருக்க முடியாது. ஆனால் எதை நம்மால் அப்படியே மீட்க முடிந்திருக்கிறது? நபர்களின், இடங்களின், பொருள்களின், சம்பவங்களின் வாசனையை நினைவில் மீட்க முடிந்தாலே திருப்தியடைந்துவிடுகிறோம். உண்மையில் கை நழுவிச் சென்றதெல்லாம் காலம் கொள்ளை கொண்டு போனவைதாம்.
இந்த இதழில் ஹரன் பிரசன்னா எழுதியிருக்கும் திருநெல்வேலியின் திரையரங்குகள் குறித்த ஒரு கட்டுரை போதும். தனது பால்யத்தின் வழியாக நம் ஒவ்வொருவரின் பால்யத்துக்குள்ளும் நுழைந்து வெளியேறும் அற்புதத்தை அதில் அவர் நிகழ்த்திக் காட்டியிருப்பதை மிகவும் ரசிப்பீர்கள்.
இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழ் இணையத்தளங்கள், முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கை, நாற்பது வருடங்களுக்கு முந்தைய கேளிக்கை அனுபவங்கள், ஐம்பதாண்டுகளுக்கும் முற்பட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் என்று இந்த இதழெங்கும் பழமையின் நறுமணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
கடந்து சென்ற எதையும் நம்மால் மீட்டெடுக்க முடியப் போவதில்லை. குறைந்தபட்சம் நினைவில் சேமித்து, நீந்திக் களிக்கலாமல்லவா?
சென்ற வாரம் காலமான இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்து ஜெயரூபலிங்கமும் ராணியின் ‘ராணிப் பதவி நீக்கிய’ தோற்றத்தைக் குறித்து பாபுராஜ் நெப்போலியனும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். அமீகரகத்தில் மழையின் பொருட்டு கடைப்பிடிக்கப்படுகிற ‘க்ளவுட் சீட்டிங்’ நுட்பம் பற்றிய நசீமாவின் கட்டுரை மிகவும் முக்கியமானது. அதைப் போலவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான தியாகராஜனின் அறிமுகக் கட்டுரையும் பல திறப்புகளைத் தரவல்லது.
சென்ற வாரம் வெளியான இளையராஜா சிறப்புக் கட்டுரைகள் பெற்ற வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலம் என்னவாக மாறினாலும் மக்களின் அடிப்படை விருப்பம், ரசனை, ஆர்வங்கள் அடியோடு மாறிவிடுவதில்லை என்பதை அது புரிய வைத்தது. அது தந்த ஊக்கத்திலேயே இந்த இதழை உருவாக்கியிருக்கிறோம்.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல சிறப்பான படைப்புகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
சிறப்புப் பகுதி: காணாமல் போனவை
வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில...
தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன...
1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது...
என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக்...
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.)...
உலகைச் சுற்றி
கடந்த மார்ச் 30ஆம் தேதி, வாஷிங்டன் டிசி வாசிகளுக்கு ‘A Throne Fit for a King’ என்று தலைப்பிடப்பட்ட திடீர் சிற்பம் ஒன்று காணக் கிடைத்தது...
டென்மார்க்கில் மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இங்கே நாம் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு நடுவே தேர்தல் அறிக்கைகளிலும்...
ருசிகரம்
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்நிலைய இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது காவல்துறையினருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி...
தொடரும்
பங்கு கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்பி வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் வரும்போதெல்லாம் அந்த முழக்கத்துக்கு அவர்களே விடுமுறை அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப்...
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...
மன்னிப்பு ஜாப்ஸ் இல்லாத முதல் வருடம் மிகவும் சவாலாக இருந்தது. புகழும், அது தரும் வெளிச்சமும் டிம் குக்கிற்கு முக்கியமல்ல. தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். ஆனால் ஆப்பிளின் தலைவர் என்றான பின் அவ்வாறிருக்க முடியாது. ஐபேடின் மூன்றாவது வெர்ஷன் வந்தது. ஆப்பிள் விழாவில் குக் இதை அறிமுகம் செய்தார்...
பீர் வளர்த்த தொப்பை 1985 – திரீஸ்டன். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலிருந்து நூற்றிருபது மைல்கள் கிழக்கிலிருந்தது திரீஸ்டன் நகரம். அழகான ஏல்பே நதியின் பள்ளத்தாக்கில், செக் குடியரசின் எல்லையில் அமைந்திருந்தது. கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அடுக்ககத்தில்...
ஆறு மனமே ஆறு ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது. ஜாப்ஸின் இறப்புக்கு முன்னரே டிம் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். டிம்மைத் தேர்ந்தெடுத்தது ஜாப்ஸ். இதற்கான எதிர்ப்புகள் ஆப்பிளுக்கு உள்ளும் புறமும் இருக்கவே செய்தன...








