Home » திருட்டு சந்தோஷம்!
சமூகம்

திருட்டு சந்தோஷம்!

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைதாகியுள்ளார் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி. இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி நிர்வாகம். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கிடைக்கும் இதுபோன்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளை எதிர்க்கட்சிகள் தவறவிடுவதில்லை. அவர்களது வாயில் அவலாக அரைபட்டுக்கொண்டிருக்கிறது ஆளுங்கட்சி.

உலகெங்கிலும் அரசியல்வாதிகள் திரைக்குப் பின்னால் திருடுவது நடைமுறையில் இருப்பதுதான். மக்களுக்கும் அது பழகிவிட்டது. ஆனால், பொறுப்பான பதவியிலுள்ள ஓர் அரசியல்வாதி, நேரடியாகக் களத்தில் இறங்கி பேருந்தில் செயினை ஆட்டையைப் போடுவதெல்லாம் புருவத்தைப் புறமுதுகுக்கு உயர்த்தும் அளவுக்குப் புதுமையானது.

அதைவிடப் புதுமையான ஒன்றையும் செய்துள்ளார் அந்தத் தலைவி. தான் பதினைந்து வருடங்களாக இதுபோன்ற நகைத் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அதை வைத்துத் தனது சொந்த ஊரில் ஒரு வணிக வளாகத்தைக் கட்டியுள்ளதாகவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அதைத்தான் கொண்டாடிக் களித்து வருகின்றனர் மீம் கலைஞர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!