Home » மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: இன்னொரு நேட்டோவா?
உலகம்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: இன்னொரு நேட்டோவா?

மத்தியக் கிழக்கின் பாதுகாப்பு அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் முக்கியப் பங்கு வகித்து வந்தன. ஆனால் தொடர்ச்சியான போர்கள், பிராந்திய மோதல்கள், அதிகரித்து வரும் பாதுகாப்பு நிச்சயமின்மை ஆகியவை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளன: தங்கள் பாதுகாப்புக்காக வெளிச் சக்திகளை மட்டுமே நம்பியிருக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கான ஒரு முக்கியமான பதிலாகவே மெக்காவில் உருவான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பார்க்க முடிகிறது.

2026 ஆகஸ்ட் 7 அன்று சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Mecca Joint Defense Agreement) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதி தெளிவானது: இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். மேலும், மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் இதன் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விதி இயல்பாகவே நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்புக் கொள்கையை நினைவுபடுத்துகிறது. இதன் காரணமாகச் சிலர் இக்கூட்டமைப்பை ‘இஸ்லாமிய நேட்டோ’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெயர் அதிகாரப்பூர்வமானது அல்ல. அதைவிட முக்கியமாக, இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தத்தை நேட்டோவுக்கு நேரடியான மாற்றாகக் கருதுவது இப்போதைக்கு அவசரமான முடிவாகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!