காஸா நகரை இஸ்ரேலிய ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை அங்கீகரிக்கப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் எதிர்காலத்தை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஏற்கெனவே முக்கால்வாசி அழிந்துவிட்ட அந்த நிலப்பரப்பிலிருந்து அத்தனை பாலஸ்தீனர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஹமாஸை ஒழித்துக் கட்டுவதற்காக ‘ஆபரேஷன் கிடியன்’ஸ் சேரியட்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த சில மாதங்களாக காஸா பகுதிக்குள் அதிதீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தைத்தான் நெதன்யாகு அங்கீகரிக்கப் போகிறார். இந்தப் போர்த் திட்டத்தின் ஒருபகுதியாக, காஸாவுக்குச் செல்லும் அடிப்படை மனிதாபிமான உதவிகளைப் பல மாதங்களாகத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது இஸ்ரேல். இதனால் அங்கு செயற்கைப் பஞ்சம் உருவாகியுள்ளது.
இதை ஐநாவின் உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டு அமைப்பான IPC உறுதிப்படுத்தியுள்ளது. பல ஐநா அமைப்புகளும், உலக நாடுகளும், தன்னார்வலர்களும் சேர்ந்தியங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு இது. இதனால் காஸாவின் கவலைக்கிடமான நிலை உலகத்தின் பார்வைக்கு இன்னும் தெளிவாக வெளிவந்துள்ளது.















Add Comment