Home » பழைய எதிரிகளும் புதிய உறவுகளும்
நம் குரல்

பழைய எதிரிகளும் புதிய உறவுகளும்

எத்தனையோ நாடுகள். என்னென்னவோ கூட்டமைப்புகள். எவ்வளவோ மாநாடுகள் எப்போதும் நடக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, அதில் சம்பந்தப்படாத ஒரு பெருந்தலைவரின் வரி விளையாட்டுகளின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொரு திருப்புமுனைத் தருணமாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கைகளும் அதற்கு அவர் சொல்லும் காரணங்களும் கவலையளிப்பவையே தவிர, அச்சப்படத்தக்கவை அல்ல. அமெரிக்காவாகவே இருந்தாலும் நியாயமற்ற எதற்கும் அடிபணியாதிருப்பது என்னும் இந்தியாவின் நிலைபாடு மிக நிச்சயமாகப் பிற நாடுகளுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாக இருக்கும்.

இந்தியாவின் ரஷ்யக் கூட்டுறவு நெடுங்கால வரலாறு கொண்டது. ஆனால் சீனாவுடன் அத்தனை இணக்கம் இருந்ததில்லை. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, இந்திய-சீன உறவு நிலையை மேம்படுத்தவிருப்பது வர்த்தகத்துக்கு அப்பால் பல்வேறு பாதுகாப்பு சார்ந்த காரணங்களின் பொருட்டு இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!