இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் ஆர். நல்லகண்ணு, பிப்ரவரி 25ஆம் தேதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 101.
1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தார் நல்லகண்ணு. ராமசாமி – கருப்பாயி தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தை. இவருடைய மூத்த சகோதரர் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் இவருக்கும் சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. ரஞ்சிதம் அம்மாளை மணந்தார், அவர் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்பாகப் பிறந்து மக்களுக்காகப் போராடிய கடைசித் தலைவராக நல்லகண்ணு இருந்தார். சாதிய ஒடுக்குமுறைக்கான போராட்டம், முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் எனத் தன் வாழ்நாளைப் போராட்டங்களுக்காகவே செலவழித்தார்.















Add Comment