198. கறுப்புக் கொடி
காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியைத் தவிர நாடறிந்த தலைவர்கள் கிடையாது. ஆனாலும் தேர்தல் தோல்விக்குப் பிறகு, குறிப்பாக ஜனதா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவது நிச்சயம் என்ற நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ‘இந்திரா காந்தி இனி கட்சிக்கு பாரம்’ என நினைத்தார்கள். அவரிடமிருந்து விலகிச் சென்றார்கள்.
‘இந்திராதான் இந்தியா! இந்தியாதான் இந்திரா’ என்று கோஷத்தை ஆரம்பித்து வைத்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான டி. கே.பரூவா சஞ்சய் காந்தியோடு சேர்ந்து ஆட்டம் போட்டுவிட்டு, இப்போது ‘இந்திரா காந்தி’ என்றால் ‘அவர் யார்? காந்திஜிக்கு சொந்தக்காரரா?’ என்று கேட்குமளவுக்கு விலகிப் போனார்.
இந்திரா காந்தியின் தயவில் கட்சியின் தலைவரான பிரம்மானந்த ரெட்டி, ‘தள்ளி இருந்தால் தலை தப்பும்’ என ஒதுங்கியே இருந்தார்.















Add Comment