219. ஷபெக் சிங் Vs கே எஸ் பிரார்
‘பொற்கோவில் வளாகத்துக்குள் துப்பாக்கி சப்தம் கேட்டால் சீக்கியச் சமூகம் கிளர்ந்தெழும். அதனால் பயங்கரமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று பிந்த்ரன்வாலே எச்சரிக்கை விடுத்தார்.
பொற்கோவிலில் கரசேவை செய்ய சீக்கியர்களை அழைத்துவரும் டிரக்குகளிலும், பொற்கோவிலுக்கு வருகிறவர்களுக்கு வழங்குகிற ‘லங்கர்’ என அழைக்கப்படும் உணவு தயாரிக்கத் தேவையான மளிகைப் பொருட்களை எடுத்துவரும் லாரிகளிலும் ரகசியமாக ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டு, பொற்கோவில் வளாகத்துக்குள் குவிக்கப்படுகின்றன என்ற தகவல் அமிர்தசரஸில் பகிரங்க ரகசியம் ஆனது.
ஆனால் பஞ்சாப் போலிஸ், சந்தேகத்துக்குரிய அந்த வாகனங்களில் பரிசோதனை நடத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், மேலே இருந்து வந்த உத்தரவு அப்படி.
எதேச்சையாக ஒரு வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, உள்ளே பல இயந்திரத் துப்பாக்கிகளும் இதர ஆயுதங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.















Add Comment