மு(அ)கத்தின் கண்கள்
ஒரு மனிதரின் பண்பையோ உணர்ச்சி நிலையையோ அறிய, நாம் அவரது கண்களைத்தான் பிரதானமாக நம்புகிறோம். மனிதர்களை எதிர்கொள்ளும்போது நாம் கண்களைத்தான் முதலில் பார்க்கிறோம் இல்லையா? நேரில் மட்டுமல்ல. புகைப்படத்தில்கூட நாம் கண்களைத்தான் கவனிக்கிறோம்.
சடலங்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும்போது கண்களை மட்டும் மறைத்திருப்பார்கள். எனில், ஒருவரது அடையாளத்தையே மறைக்கும் வல்லமை கண்களுக்கு உண்டு. கறுப்புக் கண்ணாடி அணிந்தவரிடம் இயல்பாகவே நமக்கு நெருடல் ஏற்படுவதுண்டு. அவர் கண்களை வைத்து நம்மால் அவரை எடைபோட முடியாததே அதற்குக் காரணம்.
கண்ணாலேயே பேசிக் காதல் செய்பவர் பலர். நேசத்தை மட்டுமல்ல; பயம், கோபம், வெட்கம், மகிழ்ச்சி, வெறுப்பு என அத்தனை ரசங்களையும் காட்டுபவை கண்கள். பொய்யும் அந்த வரிசையில் சேரும்.
















Add Comment