221. இந்திரா காந்தி போட்ட தடை
ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை முடிவுக்கு வந்தபின், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயில் சிங்கை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு, சற்றுக் குறி பிசகி அவருடைய பாதுகாவலரது தோளைத் தாக்கியது.
ராணுவ நடவடிக்கை மூலமாக பிந்த்ரன்வாலே தொடங்கி அவரது தீவிரவாத கும்பல் முழுவதையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டிவிட்டதாக ராணுவம் நினைத்தது தவறு என்று புரிந்தது.
உடனடியாகப் பொற்கோவில் வளாகம் முழுவதுமாக அங்குலம், அங்குலமாகச் சல்லடை போட்டுச் சலித்து, மிச்சம் சொச்சமிருந்த தீவிரவாதிகளுக்கும் ஜூன் 10 ஆம் தேதியோடு முடிவுரை எழுதப்பட்டது.
இந்த ராணுவ நடவடிக்கையில் சந்தித்த சவால்களின் அடிப்படையில்தான் அதன் பின்னர் வி.வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளின்போது பயன்படுத்தவும் மத்திய அரசு என்.எஸ்.ஜி என்ற தேசிய கமாண்டோ படையை உருவாக்கியது.















Add Comment