அலெக்ஸாண்ட்ரியாவின் மூளை
(கிளியோபாட்ரா)
மத்திய தரைக்கடலின் அலைகள் அலெக்ஸாண்ட்ரியா நகரின் பிரம்மாண்டமான கலங்கரை விளக்கத்தின் மீது மோதிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்ட்ரியா அரச மாளிகையின் அந்தரங்கக் கூடத்துக்குள் விடியலின் முதல் ஒளிக்கதிர் ஜன்னல் வழியே மெல்ல விழுந்தது. தூய வெள்ளை லினன் ஆடையுடன், தன் விரலில் தாலமிக் வம்சத்தின் அதிகாரப்பூர்வ அரச முத்திரை மோதிரத்தை அணிந்தபடி, ஜன்னல் வழியே விடியலைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஏழாம் கிளியோபாட்ரா.
உலக இலக்கியங்கள் இவரை வெறும் ‘பேரழகி’ என்ற பிம்பத்துக்குள் சுருக்கிவிட்டன. ஆனால் கிளியோபாட்ரா, ரோமானியப் பேரரசின் அசுர பலத்திற்கு முன்னால் எகிப்தின் சுதந்தரத்தை ஒற்றைப் பெண்ணாக நின்று காப்பாற்றியவர். அதற்காக அவர் கையில் எடுத்த முதன்மை ஆயுதம் பேரழகு அல்ல, அசாத்தியமான அறிவுத்திறன் மட்டுமே.
அரண்மனையின் அவைக் கூடத்தில் அன்றைய நாளின் முதல் அலுவல் தொடங்கியது. கிழக்கே பார்த்தியா, தெற்கே எத்தியோப்பியா, சிரியா போன்ற பக்கத்துத் தேசத்துத் தூதர்கள் வரிசையாகக் காத்திருந்தனர். எகிப்திய வரலாற்றிலேயே, தங்களை ஆண்ட கிரேக்கத் தாலமிக் அரசர்களில் எகிப்திய மொழியைக் கற்றுக்கொண்ட முதல் அரசி அவர்தான்.
















Add Comment