Home » ஓணம் சத்யா: சலனங்களும் சங்கடங்களும்
நகைச்சுவை

ஓணம் சத்யா: சலனங்களும் சங்கடங்களும்

ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்பே, தமிழ் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவென்சர்ஸ் எல்லோரும் தங்கள் வீட்டை கேரளாவுக்கு மாற்றிவிட்டார்களோ என்று சந்தேகம் எனக்கு வரத் தொடங்கியது. அந்த அளவுக்கு அனைவரும் கேரளவாசிகளாகி ஓணம் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். இன்ஸ்டாகிராமைத் திறந்தால் போதும். எங்கும் ஓணம். எதிலும் ஓணம்.

ஆகஸ்ட் இருபத்தி ஆறாம் தேதிதான் ஓணம் பண்டிகை. ஆனால் அதற்குப் பல நாட்களுக்கு முன்பே இன்ஸ்டாகிராமில் ஓணம் பண்டிகையைக்  குடியேற்றி, அதற்கு ஆதார் அட்டை வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இருந்தார்கள் இன்ஃப்ளூவென்சர்ஸ்.

பாரம்பரியத்தை விட, புடைவைதான் முக்கியம் என்பது போல நடந்து கொண்டார்கள். சந்தன நிறம் மட்டுமே கொண்ட பாரம்பரியப் புடைவையில் என்னென்னவோ புதுமைகளைப் புகுத்தி விதவிதமாக அணிந்து இன்ஸ்டாகிராமில் வலம் வந்தனர்.

பாரம்பரியச் சந்தன நிறத்தில் தங்க பார்டர் கொண்ட புடைவைகளைப் பார்க்கவே முடியவில்லை. பார்டர் கலர்களை மாற்றினார்கள். ஜாக்கெட் கலர்களை மாற்றினார்கள்.  விதவிதமான ஜாக்கெட் டிசைன்களை உருவாக்கினார்கள். புடைவையின் மடிப்பு மாறியது. அணியும் விதம் மாறியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!