சாதாரணமான ஒரு நாளைச் சாகசங்கள் நிறைந்த நாளாக மாற்றும் வல்லமை என் இளைய மகளின் சில அறிவிப்புகளுக்கு உண்டு.
அப்படித்தான் சென்ற வார வியாழக்கிழமை மாலை, ‘அம்மா, ஞாயிற்றுக்கிழமை ஆறுவிதமான இலைகளைக் கொண்டு வரணும்னு டீச்சர் சொல்லி இருக்காங்க’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டாள். அதோடு என் வாரயிறுதி ஓய்வுக்கும் அதிகாரப்பூர்வமாக வேட்டு வைத்துவிட்டாள்.
‘ஞாயிற்றுக்கிழமையா? இதில் ஏதோ கிழமைப்பிழை இருக்கிறதே!’ என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. பிழையொன்றும் இல்லை. இங்கே ஓமானில் வாரம் தொடங்குவது ஞாயிறன்றுதான். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் விடுமுறை நாட்கள்.
அவளுக்கு அன்று ‘சரி’ என்று சொன்ன நேரம், நல்ல சுபயோகச் சுபமுகூர்த்தம் என்றுதான் என் நாள்காட்டி கூறியது. ஆனால், வாஸ்து பார்க்காமல் வாய் விட்டுச் சொல்வது தவறு என்று ஶ்ரீ ஶ்ரீ வாஸ்துபாபாஜீ அவர்கள் தனது வாஸ்து பதக்கத்தில் எப்போதோ கூறியிருந்ததை அந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கவில்லை.
நினைத்திருந்தால் கூட என்ன பயன்? ‘சரி’ என்ற அந்த வார்த்தை வாயிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டதே!
















Add Comment