Home » அத்தனைக்கும் ஆசைப்படாதே!
குற்றம்

அத்தனைக்கும் ஆசைப்படாதே!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒருநாள் இன்ஸ்டாகிராமில் உலவிக்கொண்டிருந்தபோது, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டுமா? எங்கள் இலவச வகுப்புகளில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். ஆர்வத்தில் அந்த இணைப்பை கிளிக் செய்தார். அது ஒரு வாட்ஸ்அப் சாட்டுக்கு அழைத்துச் சென்றது.

​அங்கு ஒரு பெண், ‘வளமான எதிர்காலத்திற்கு வருக!’ என வரவேற்று ஒரு டெலிகிராம் குழுவில் இணைத்தாள். அந்தக் குழுவில் கீதாவுடன் சேர்த்து ஏழு பேர் இருந்தனர். ‘அட்மின்’ என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு பெண், அனைவரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டார். கீதா தயங்கினார். மற்ற ஐந்து பேரும் அடுத்தடுத்து அனுப்பினர். அதைப் பார்த்துச் சிறிது நம்பிக்கை வந்து கீதாவும் அனுப்பினார்.

​அடுத்ததாக அட்மின் ஐந்து இணைப்புகள் கொடுத்து, அங்கு சென்று கூகிள் விமர்சனம் (Google Review) இடச் சொன்னார். கீதாவும் செய்தார். உடனடியாக வங்கிக் கணக்கில் 150 ரூபாய் பணம் வந்தது. அட்மின் மீண்டும் ஐந்து இணைப்புகள் கொடுத்தார். மீண்டும் 150 ரூபாய் வந்தது. அத்துடன் அன்றைய நாள் முடிந்தது. ‘ஆகா, உழைக்காமல் 300 ரூபாய்!’ கீதா அன்று இரவு முழுவதும் தூங்காமல் கனவில் மிதந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!