Home » எங்கே அந்தப் பதினெட்டு லட்சம் பேர்?
திருவிழா

எங்கே அந்தப் பதினெட்டு லட்சம் பேர்?

நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல், கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்தது. பழையன கழித்து , புதுப்பொங்கல் வைத்து, மாட்டை வணங்கி அல்லது விரட்டிப் பிடித்து முடித்த பின்னர் குடும்பத்துடன் சிற்றுலா செல்லும் நாளே காணும் பொங்கல்.

சோழர் காலத்துக்குப் பிந்தைய அல்லது சுதந்தரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், காணும் பொங்கல் என்பது வீட்டுப் பெரியவர்களைச் சென்று வணங்கி ஆசிபெற்ற நாளாக இருந்திருக்கும்.

இந்நாட்களில் வார இறுதிக்கே உணவகம் செல்லும் வாழ்க்கை முறைக்குப் பழகிய நமக்கு, வருடம் ஒருமுறை வீட்டை விட்டுக் கிளம்பி ஊரை நாறடிப்பதில் என்ன சுணக்கம் வந்துவிடப் போகிறது? கூட்டத்தையும் நெரிசலையும் குழந்தைகளுக்குப் பழக்கி வாழ்க்கைமுறையாக்கிய பிறகு, எத்தனை கூட்டம் கூடினால் என்ன கவலை? லட்சத்தில் ஒரு தலை நம் தலை என்பதே லட்சியம்!

எந்தத் தலைவனும் அழைக்காமலேயே சென்னை கடற்கரை நோக்கி மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து விடுகிறார்கள். எவ்வளவு பரந்து விரிந்திருந்தாலும் ஒவ்வொரு மணல் துகளுக்கும் இணையான கூட்டம் வந்தால் கடல்தான் என்ன செய்ய முடியும்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!