07 – உயிர் கொடுத்த நட்பு
அப்பா விளாதிமிரிடம் நிறைய கதைகளைக் கேட்டு வளர்ந்தான் வலோத்யா. பாசத்தைக் கொட்டவில்லை என்றாலும் அவனது ஹீரோ அப்பாதான். அவரது ராணுவ அனுபவங்கள் இவனுக்குப் பிரமிப்பைத் தந்தன.
உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் ஆயுதக் கிடங்குகளை வெடிக்கச் செய்வதுதான் அப்பாவின் வேலை. லெனின்கிராட் மாகாணத்தின் கிங்கிசெப் மாவட்டத்தில் ஒரு குண்டுவெடிப்பைத் திட்டமிட்டபடி முடித்தனர். சில எஸ்டோனியர்களின் உதவியோடு சிலநாள் மறைந்து தப்பித்தவர்களை ஜெர்மானியப் படை சுற்றி வளைத்தது. தப்பியோடும்போது வழியிலிருந்த சதுப்புநிலத்தில் குதித்து, துரத்தி வந்த வேட்டை நாய்களிடமிருந்து தப்பித்தார் அப்பா. குழுவிலிருந்த இருபத்தெட்டு பேரில் நான்கு பேர் மட்டுமே தப்பினார்கள்.
எந்தப் பேராபத்திலிருந்து தப்பித்தால் என்ன? உயிருடன் இருக்கும்வரை வீரர்களுக்கு ஓய்வில்லை. வழக்கம்போல மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டார்.















Add Comment