Home » பனிப் புயல் – 12
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 12

12 – இவன் யாரென்று புரிகிறதா?

தேர்தல் சமயத்தில் அதிபர் புதினுடன் விவாதிக்க வந்திருந்தார் மேற்குலகப் பிரமுகரான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேடலின் ஆல்பிரைட். ஒருமணி நேரம் திட்டமிடப்பட்ட விவாதம், மூன்று மணிநேரம் நீண்டது. தயாரித்திருந்த குறிப்புகளை ஒதுக்கிவிட்டு தனது ஸ்டைலில் ஆரம்பித்தார் புதின்.

பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று நேரடியாக விவாதத்தைத் தொடங்கினார். ரஷ்ய அதிபர்கள் மீதிருந்த மேற்குலகின் அபிப்ராயத்தை புதினின் அணுகுமுறை முற்றிலும் மாற்றியது. உலக அரசியல் மீது அவருக்கிருந்த தெளிவான பார்வை, பிரச்சினைகளை அவற்றின் அடிப்படைகள் வரை அறிந்திருந்தது, முடிவை முன் வைக்காமல் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தது, இருதரப்புமாகச் சேர்ந்து தீர்வு காண விழைந்தது என அமெரிக்க அதிகாரி மேடலினை பிரமிக்க வைத்தார் புதின். மேற்குலகுக்கும் மாஸ்கோவுக்குமான உறவிலிருந்து, சீன உணவுக்கு சாப் ஸ்டிக்ஸை எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சென்றது அவர்களின் விவாதம்.

செச்சனியப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களைக் குறித்து விவாதிக்க வந்திருந்தார் மேடலின். ‘போருக்கு மத்தியிலும் மேடலின், புதினுடன் அன்பாகப் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்’ என்றது அடுத்த நாள் வெளியான மேற்குலகப் பத்திரிகையின் தலைப்புச் செய்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!