Home » இஸ்ரேலுக்கு உதவாதே!
உலகம்

இஸ்ரேலுக்கு உதவாதே!

சுந்தர் பிச்சை

அமெரிக்காவின் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூன் 14ஆம் தேதி நடந்தது. மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என இருபதாயிரத்துக்கும் மேலானோர் அங்கு கூடியிருந்தனர். விழாவில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவின் முக்கியப் பகுதியாக, மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய சிறப்புரையை வழங்கத் தொடங்கினார் சுந்தர் பிச்சை. தன்னை அழைத்தற்காகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு நன்றியைச் சொல்லி, பட்டம் பெறுகிற மாணவர்களை வாழ்த்திவிட்டு தன் உரையை ஆரம்பித்தார்.

திடீரென ஆங்காங்கே சில மாணவர்கள் எழுந்து நிற்கத் தொடங்கினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் வரிசையாக எழுந்து, கூட்டத்தை விட்டு வெளியேறி மெல்ல நடக்க ஆரம்பித்தனர். என்ன நிகழ்கிறதென்று புரியாமல், அங்கிருந்தவர்கள் மத்தியில் லேசான குழப்பம் உண்டானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!