Home » எங்கு காணினும் உணவு
ருசி

எங்கு காணினும் உணவு

டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் என்ற நிறுவனம், சிறந்த உணவுப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 50ஆவது இடம் கிடைத்திருக்கிறது. பட்டியலோடு நிற்காமல், இலங்கையின் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் உரிய சுவையான உணவுகளின் பட்டியலையும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொழும்புக்கு கொத்துரொட்டி, சோறு – கறி, அப்பம், கடலுணவு. காலிக்கு (Galle) கடலுணவு. கண்டிக்கு (Kandy) இனிப்புப் பண்டங்கள். நீர்கொழும்புக்கு மீன் வறுவல். யாழ்ப்பாணத்துக்கு நண்டுக் கறியும் தோசையும். சுவையான தேநீர் நுவரெலியாவிலும், பாரம்பரியக் கடலுணவுகள் திருகோணமலையிலும் கிடைக்கும் என அந்தப் பட்டியலில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து கொழும்பு போகும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏறி அமர்ந்தால் ஜஸ்ட் ஒரு மணித்தியாலத்தில் கட்டுநாயக்கவில் இறக்கிவிடுவார்கள். கையில் அதிகம் பொருட்கள் வேண்டாம். சாப்பாட்டுக்குப் பொதிகள் இடைஞ்சல். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து உடனே கொழும்பு பஸ்ஸில் ஏறிவிடாதீர்கள். ஆட்டோ பிடித்தோ, நடந்தோ பஸ்ஸ்டாண்ட் பக்கம் செல்லுங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!