பெரும்பாலான தமிழர்கள் காலை எழுந்து, பல் துலக்கியவுடன் செய்யும் வேலை என்ன? காபி குடிப்பது. இந்தியாவிலேயே அதிகமாகக் காபி அருந்தும் மாநிலம் தமிழகம். காபி நமக்கு அலுப்பதே இல்லை. எங்கேயும் எப்போதும் கோல்ட் காபி, லியோ சாக்லேட் காபி, கொரோனா காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட டல்கோனா காபி என்று அயர்ச்சி ஏற்படுத்தாத அளவுக்குக் காபி வகைகளை வைத்துள்ளோம். நம் ஊர்க்காரர்கள் 40° அக்னி நட்சத்திரத்திலும் 60 டிகிரி சூட்டில் டிகிரி காபி குடிப்பவர்கள்.
இப்படித் தமிழர்களின் ரத்தத்திலும் சதையிலும் கலந்திருக்கும் ‘எலிக்ஸியர் ஆஃப் லைஃப்’ தமிழகத்துக்கு வந்து 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தியாவுக்கே காபி வந்து நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அப்பேற்பட்ட இந்த காபி நம் அண்டை மாநிலமான கர்நாடகாவிலுள்ள சிக்மகளூருவுக்கு வந்தது ஒரு சுவாரசியமான வரலாறு.
















Add Comment