எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர். மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும்...
Tag - உலகம்
‘நீ ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?’என்று கேட்டால் அது ’96 திரைப்படத்தில் வரும் ஜானு. ‘நீ செத்து போயிட்டியா ராம்?’ என்று கேட்டால் அது சீனாவின் செயலி. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தவறாமல் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது சீனாவின் Are You Dead? செயலி. மங்கலகரமான இந்தப்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
இரானில் கடந்த பதினேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரானின் நாணயமான ரியாலின் (Rial) மதிப்புச் சரிவு காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அந்நாட்டின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை அகற்றுவதற்கான உள்நாட்டுக் கலவரமாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்புப் படையினர்...
வெனிசுவேலாவை ‘மிராஃப்ளோரேஸ்’ அரண்மனையிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல் அவரை ஒரு நள்ளிரவில் சிறைபிடித்து வந்தது அமெரிக்க அரசு. கூடவே அவரது மனைவி சீலியா ஃப்ளோரெஸ்ஸும் கைது செய்யப்பட்டார். இப்போது இருவரும் நியூயார்க் நகரின்...
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...
ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post...
உள்நாட்டுப் போர், கலவரங்களுக்கு மத்தியில் மியான்மரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆங் சாங் சுகி தலைமையிலான கட்சி 83 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, புதிய அரசு...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...
இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...












