Home » உலகம் » Page 2

Tag - உலகம்

உலகம்

காஸாவை நாசம் செய்த நாஸா

‘நான் இப்போதும் நாஜிக்களைத் தீயவர்களாகவே பார்க்கிறேன். அப்படியெனில் நான் யார்?’ – ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர். நாஸா. இஸ்ரேல் எதிர்ப்பாளர்களும் பாலஸ்தீன எதிர்ப்பாளர்களும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி உச்சரிக்கும் சொல் இது. ‘நாஸா’ ஒரு புலனாய்வு ஆவணப்படம். யுவால் ஆப்ரகாம்...

Read More
உலகம்

பீதியைக் கிளப்பும் பிளேக்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள தார்யா ஷிபிலோவ்வின் மரணம், உலகம் முழுக்க பிளேக் நோயின் அச்சத்தைப் பரப்பியிருக்கிறது. இருபத்தெட்டு வயதாகும் தார்யா, அங்குள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவர். இம்மாதம் இரண்டாம் தேதி திடீரெனக் கடும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு...

Read More
உலகம்

எத்தியோப்பியா: பற்றி எரியத் தயார்!

போர் முடிந்துவிட்டது என்று காகிதத்தில் எழுதிப் பிரகடனப்படுத்துவது எளிது. ஆனால் அந்தக் கோப்புகள் எப்போது வேண்டுமானாலும் குப்பைத் தொட்டிக்குள் செல்லலாம். போர் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிக வாழ்நாள் கொண்ட சம்பிரதாயங்கள் மட்டுமே. எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்தியம் இன்று அந்த உண்மையை மீண்டும்...

Read More
உலகம்

விண்வெளிச் சண்டை

விண்வெளியில் வல்லரசுகளின் ராணுவப் போட்டி அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா தனது விண்வெளிப். படையை வலுப்படுத்தி வருகிறது. விண்வெளியில் கட்டுப்பாட்டு ஆயுதங்களை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தனது படைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எனக் கூறுகிறது. அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய்...

Read More
உலகம்

நிலா என்ன விலை கேளு?

நிலா அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருக்கிறார். ‘இந்த ரோடு என்ன விலைனு கேளு… இந்த ஊரு என்ன விலைனு கேளு’ என்று லாட்டரிச் சீட்டுப் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி துள்ளிக் குதிப்பாரே, அதுபோல இருக்கிறது டிரம்ப்பின் சமீப கால அறிவிப்புகள். இரான் இறுமாப்பாய்...

Read More
உலகம்

மதிக்கப்படாத தேர்தலும் மிரட்டி ஜெயிக்கும் சர்வாதிகாரமும்

திரைத்துறையினரின் அரசியல் வருகையும் வெற்றியும் தென்னிந்தியாவுக்குப் பழகிவிட்டது. கேஜிபியில் பணிபுரிந்த அதிகாரிகள் சோவியத்தின் அரசியலில் அதிகாரத்திலும் முக்கிய இடங்களைப் பிடிக்கும் நடைமுறைக்கு ரஷ்ய மக்கள் பழகிவிட்டார்கள். தற்போதைய டிரெண்டாக, போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளாக ரஷ்ய...

Read More
உலகம்

ஆக்கிரமித்து அழி!

அப்பாவி மக்கள் ஒருபக்கம், அரசுகள் இன்னொரு பக்கம். அரசுகளின் பார்வையில் மக்கள் ஆளப்பட வேண்டியவர்கள். உலகின் பெரும்பாலான அரசுகள் அடக்கியாள்வதையே கொள்கையாகக் கொண்டுள்ளன. அதிலும் இஸ்ரேல் நாட்டின் தற்போதைய நெதன்யாகு அரசின் செயல்பாடுகளை அடாவடித்தனத்தின் உச்சம் என்றே குறிப்பிடலாம். இறை நம்பிக்கை, வரலாறு...

Read More
உலகம்

உலக வரைபடமும் வாய்க்கால் தகராறுகளும்

கடந்த வாரம், புதிய உலக வரைபடத்தை ஏற்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பல மாதக் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நூற்று அறுபத்து நான்கு உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது...

Read More
உலகம்

இந்தச் சம்பளம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் இந்திய மதிப்பில் சுமார் இருபத்தேழு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மிக அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர்களில் லாரன்ஸ் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்த ஊதிய உயர்வுக்குப் பின்னால், சிங்கப்பூரை நவீன அரசாக வடிவமைத்த லீ குவான் யூ...

Read More
உலகம்

பால்கனியில் மின்சாரப் பயிர்!

ஜெர்மனியின் பெர்லின், கியால் உள்ளிட்ட நகரங்களில் வீட்டிலேயே மின் உற்பத்தி செய்யும் சூரியசக்தித் தகடுகள் பிரபலமாகி வருகின்றன. அங்குள்ளவர்கள் இதை balkonkraftwerk என்கிறார்கள். அதாவது, பால்கனியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் தகடுகள். நம் ஊர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருக்கும் பால்கனியில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!