Home » இந்தியா » Page 23

Tag - இந்தியா

இந்தியா

உப்புமா எதிர்ப்புக் கூட்டணி

திமுக உறுப்பினர் சிவா மக்களவையில் பேசும்போது உப்புமாக் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். உப்புமா வேண்டாம் என்று சொல்லிய கல்லூரி மாணவர்களிடம் என்ன வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினார்களாம். பெரும்பான்மை வாக்குகள், பூரி, இட்லி, மசாலா தோசை, ஆம்லெட் என்று பல உணவுகளுக்குப் பிரிந்து விழுந்ததால் யாரும்...

Read More
இந்தியா

யாரு சார் நீங்கல்லாம்?

அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல அமெரிக்க ரிட்டர்ன் அரசியல் வாரிசுகளும் சினிமாக்களில் பிரபலம். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அப்படி ஒருவர். நீண்டகால முதல்வர்கள் வரிசையில் ஜோதிபாசுவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். முதலிடமும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஒரு...

Read More
இந்தியா

மணிப்பூர்: கலவர காலக் குறிப்புகள்

நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். காணவே சகிக்காத இந்த சம்பவம் நடந்தது மே மாதத் தொடக்கத்தில். இந்தக் காணொளிதான் இப்போது சமூக ஊடகங்களில் பரவி...

Read More
இந்தியா

நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!

டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட் செய்திகள் வந்து, இப்போதுதான் மூச்சுவிட்டுக்கொள்ள சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக மழை குறைந்திருக்கிறது. இம்முறை வரலாறு காணாத மழை வெள்ளம்...

Read More
இந்தியா

நிலவைப் பிடித்தல் பற்றிய குறிப்புகள்

வருகின்ற ஜூலை பதினான்காம் திகதி சந்திரனை நோக்கிப் புறப்படும் இந்திய விண்கலம் சந்திரயான் 03 திட்டத்தின் மொத்தப் பெறுமதி 615 கோடிகள்! நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கால் வைத்த நிலவுப் பரப்பில் இது வரை மொத்தம் பன்னிரண்டு மனிதர்கள் கால் வைத்திருக்கிறார்கள். அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு இதே ஜூலை மாதத்தில் அப்பல்லோ 11...

Read More
இந்தியா

பொது சிவில் சட்டம்: இப்போது என்ன அவசியம்?

பொது சிவில் சட்டம் (Common Civil Code). பிரதமர் மோடி கடந்த ஜூன் 27-ஆம் தேதி போபாலில் இதைப் பற்றிப் பேசிய பிறகு பலரும் எதிர்த்தோ ஆதரித்தோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பல வருடங்களாகப் பேசப்பட்டு வரும் இந்த பொது சிவில் சட்ட விவகாரம் பாரதிய ஜனதாவின் 2019-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அடுத்த...

Read More
இந்தியா

மணிப்பூர்: மயானமாகிக்கொண்டிருக்கும் மாநிலம்

ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள். சிலர் ராணுவச் சீருடை அணிந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட பெண்ணிடம் மாற்றி மாற்றி அவர்கள் ஏதோ கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். எட்டி உதைக்கிறார்கள்...

Read More
இந்தியா

சாதிப்பாரா நிதிஷ்குமார்?

இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஆர்ஜேடிக்கும் நிதிஷ் கூட்டணி எல்எல்ஏக்களுக்கும் இருந்த வித்தியாசம் ஒரு கை விரல் எண்ணிக்கைக்கும் குறைவே. இருதரப்புமே பெரும்பான்மை...

Read More
இந்தியா

கூடித் தொழில் செய்

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...

Read More
உலகம்

மோடியின் அமெரிக்கப் பயணம் சாதித்தது என்ன?

இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!