குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியக விஞ்ஞானிகள் இணைந்து, ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய வகை உயிரினத்தை கண்டறிந்துள்ளனர். மார்சுபியல் (Marsupials) பிரிவிலுள்ள பிளானிகேல் பேரினத்தைச் சேர்ந்த இதற்கு ‘ஆர்ன்ஹெம் பீடபூமி பிளானிகேல்’ (Arnhem Plateau Planigale) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மார்சுபியல் என்பது பைப்பாலூட்டிகள் இனம். இவற்றுக்கு வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பு இருக்கும். முதிர்ச்சியடையாத குட்டிகளை இவை இந்த வயிற்றுப் பைக்குள் சுமந்து, பாதுகாத்துப் பாலூட்டி வளர்க்கின்றன. கங்காரு, கோலா, வொம்பாட், தாசுமேனியன் டெவில் போன்ற உயிரினங்கள் இவ்வகையில் சேரும்.
உலகிலுள்ள எழுபது சதவீதப் பைப்பாலூட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் வாழ்கின்றன. பிளானிகேல்களும் தம் குட்டிகளைப் பையில் வைத்து வளர்க்கின்றன. இவை மிகவும் சிறியவை; ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் நீளமும், நான்கு முதல் பத்து கிராம் எடையும் உள்ளவை—அதாவது வீட்டு எலியின் அளவில் பாதி மட்டுமே.















Add Comment